அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு

அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-12-20 00:13 GMT
அறந்தாங்கி, 

அறந்தாங்கி அருகே சுனையங்காட்டையை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). இவர் நேற்று அறந்தாங்கியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கயில் நகையை ரூ.90 ஆயிரத்துக்கு அடகு வைத்தார்.

பின்னர் அவர் அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். தொடர்ந்து அவர் பஸ்நிலையம் பின்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதைேநாட்டமிட்ட மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.90 ஆயிரம், வங்கி பாஸ் புத்தகம், ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவைகளை திருடி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதனிடையே கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய சின்னதம்பி மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்