அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆய்வு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அரியலூர்,
தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அரியலூர் மாவட்டத்திற்கு வந்தார். நகர எல்லையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் ஏறியதும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ரூ.26 கோடியே 52 லட்சத்தில் 6 துறைகளை சேர்ந்த 14 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
பின்னர் ரூ.36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் 21 ஆயிரத்து 509 பயனாளிகளுக்கு ரூ.129 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆய்வு கூட்டம்
இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரத்னா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை எடுத்த சீரிய நடவடிக்கை காரணமாக இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவிட்டு இங்கு வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும், அதன் அடிப்படையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
11 பேர் மட்டுமே...
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 613 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஒருவர் மட்டும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் 10 பேர் நேற்றைய தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 11 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் 510 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் 30 ஆயிரத்து 422 மனுக்கள் பெறப்பட்டு 20,053 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
சட்டமன்ற கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையை ஏற்று அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.347 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜெயங்கொண்டத்தில் ரூ.20 கோடியே 88 லட்சத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
விரிவான திட்ட அறிக்கை
அரியலூரில் முழுமையான புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற இம்மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூர் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கிராமப்புற ஏழை-எளிய மாணவ-மாணவிகள் பயன் அடையும் வகையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கொறடா மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைைம ெகாறடாவுமான தாமரை ராேஜந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், அரியலூர் நகராட்சி ஆணையர் மனோகர், ஜெயங் கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, அரியலூர்-பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- கொள்ளிடம் ஆற்றில் மழைநீர் கடலில் வீணாக கலக்கிறது. நீங்கள் இது தொடர்பாக ஆய்வு பணி மேற்கொண்டீர்கள். தூத்தூர் - மண்ணியார் வாழ்க்கை கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்படுமா?
பதில்:- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கேதான் குமாரமங்களத்தில் ஒரு தடுப்பணை கட்டிக்கொண்டு இருக்கிறோம். சுமார் ரூ.375 கோடியில் நடைபெறும் பணியில் இன்று பாதி வேலை முடிந்துள்ளது. அடுத்தது நஞ்சை புகளூர் கரூர் பக்கத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அண்மையில் மத்திய உள்துறை மந்திரி அடிக்கல் நாட்டினார்.
அந்த பணியும் விரைவாக தொடங்கும். இப்படி ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இதற்கு நிதி வேண்டும். நிதி ஆதாரத்தை பெருக்கி ஒவ்வொரு பகுதியாக எங்கெங்கெல்லாம் நீரைத்தேக்கி வைக்க முடியுமோ, அதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்மேலாண்மை திட்டத்தில் இந்த ஆண்டு தேசிய அளவில் விருது பெற்று இருக்கிறோம்.
அனல்மின் நிலைய திட்டம்
கேள்வி:- ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளதே?
பதில்:- இது ஒரு நீண்ட காலப்பிரச்சினை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக 8,388 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திடம் 2005-ல் பழுப்பு நிலக்கரி எடுக்க ஒப்படைக்கப்பட்டது. மேற்படி திட்டத்தை என்.எல்.சி. மூலம் செயல்படுத்த 2007-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுதான் நடந்தது.
இதில் நீதிமன்றத்திற்கு போனார்கள். அதில் நிலத்தின் மதிப்பில் 43 சதவீதம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அது இடையில் அப்படியே நின்றது. லோக் அதலாத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் கூறினார்கள்.
அதன்படி கூவத்தூர், காட்டாத்தூர் ஆகிய இரண்டு கிராமங்களில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 11 கிராமங்களில் நிலம் கொடுத்த விவசாயிகளையும் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதன் அடிப்படையில் செயல் படுத்தப்படும்.
தனிச்சாலை
கேள்வி:- சிமெண்டு் ஆலைகளால் அரியலூரில் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால், லாரிகள் செல்வதற்கு தனிச்சாலை அமைக்கப்படுமா?
பதில்:- ஏற்கனவே இருக்கிற சாலைக்கே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பிரமாண்டமாக மத்திய அரசு அறிவித்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். 92 சதவீதம் பேர் சேலம்- சென்னை எட்டுவழி சாலைக்கு இசைவு கொடுத்துள்ளனர். 8 சதவீதம் பேர் வேண்டுமென்றே திட்டமிட்டு, அதனை தடை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதனை பூதாகரமாக ஆக்கிவிட்டார்கள். அந்த திட்டம் நீதிமன்றம்வரை போய் இப்போதுதான் நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அது மத்திய அரசு திட்டம். ரூ.10 ஆயிரம் கோடி கொடுக்கின்றார்கள் என்றால் அது சாதாரண விசயம் அல்ல. 50 கிலோ மீட்டர் தொலைவு மிச்சம் ஆகிறது. எரிபொருள் குறைகிறது.
விபத்து குறைகிறது. நிலம் மட்டும்தான் நாம் எடுத்து கொடுக்கிறோம். நிலம் எடுத்து கொடுப்பது சாதாரண விசயமல்ல. பெரிய கஷ்டம். அதனால் எங்கெங்கெல்லாம் விவசாயிகள் நிலம் கொடுக்கிறார்களோ, அங்குதான் செயல்படுத்த முடியும். நிலம் கொடுக்க மறுக்கிறார்களே. அதுதான் பிரச்சினையே. நிலம் கொடுக்க முன்வந்தால் அரசு சாலை அமைக்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான ராஜாரவி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம், தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன், துணைத்தலைவர் கண்ணன், தா.பழூவூர் மாணவரணி ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், தா.பழூர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முருகன், கே.டி.எஸ்.சம்பத், தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.மைக்கேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் வெங்கட்ராமன், தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவகுணசேகரன், உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சையதுமஹதூம், மாவட்ட கவுன்சிலர் தத்தனூர் நல்லமுத்து, செல்லக்கண்ணு, பழனிவேல், சுமதி சுந்தரபாண்டியன், வெண்மான் கொண்டான் வி.ஆர்.செங்கான், மணகெதி ஊராட்சி தலைவர் பழனிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன், மாவட்ட கவுன்சிலர் தனசெல்வி சக்திவேல், கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து, முன்னாள் தொகுதி கழக செயலாளர் சேட்டு ராஜேந்திரன், மாவட்ட கழக பிரதிநிதி தவமணி, ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் திருமுருகன், திருமானூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பளிங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், கீழக்கவட்டாங்குறிச்சி கிளை கழக செயலாளர் மணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய பொருளாளர் ஜானகிராமன், கீழக்கவட்டங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் ராஜகுமார், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், அரியலூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பாலசுப்பிரமணியன், ஒன்றிய கழக பொருளாளர் சாமிதுரை, அரியலூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர கழகம் ஜெம்கண்ணன், மில்க் மணி, புரட்சி சிவா, ஆஸ்கர் செந்தில், தாமரைக்குளம் ஊராட்சி தலைவர் பிரேம்குமார், அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கல்லங்குறிச்சி பாஸ்கர், அரியலூர் நகர செயலாளர் ஏ.பி.செந்தில், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் ஓ.வெங்கடாஜலபதி.
விளாங்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் பெ.காமராஜ், துணைத் தலைவர் வ.சாமிநாதன், காட்டுபிரிங்கியம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.கந்தசாமி, துணைத்தலைவர் ம.அழகேசன், பெரியதிருகோணம் கூட்டுறவு சங்க தலைவர் வை.கோ.சிவபெருமாள், துணைத் தலைவர் ரா.சாமிநாதன், அயன் ஆத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் செ.செல்வாம்பாள், துணைத் தலைவர் த.வேலுசாமி, பொய்யூர் கூட்டுறவு சங்க தலைவர் சி.நித்தியா, துணைத்தலைவர் பா.ராதா கிருஷ்ணாவேணி, அரியலூர் தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் கு.க.சங்கர், அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர் என்.கணேசன், கிளைக் கழக செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆண்டிமடம் ஒன்றிய குழுதலைவருமான சிலம்பூர்.மருமுத்து, ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு மாவட்ட கவுன்சிலருமான ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு.செல்வம், இணைச்செயலாளர் சுரேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான கவிதா.ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் சிங்காரம் (தெற்கு), ஒன்றிய துணை செயலாளர்கள் கலையரசன் (தெற்கு), ஆடியபாதம் (வடக்கு), ஒன்றிய பொருளாளர் ரமேஷ் (தெற்கு), மாணவர் அணி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் (வடக்கு), மாவட்ட பிரநிதிகள் மணிசேகர், காமராஜ், ஊராட்சிமன்ற தலைவர் சேரநாதன்.
ெஜயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெகன்ராஜ், அ.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், நகரசெயலாளர் பி.ஆர்.செல்வராஜ், தேவாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளருமான தங்கபிச்சமுத்து, கல்லாத்தூர் வடவீக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சதாசிவம், அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாதுரை என்கிற கந்தசாமி, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.