புளியங்குடியில் செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

புளியங்குடியில் செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-16 23:39 GMT
புளியங்குடி,

புளியங்குடி நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புலவேந்திரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதா. இவர்களுடைய மகள் செல்வி (வயது 15). இவர் புளியங்குடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதற்காக, தந்தை புலவேந்திரன் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். சம்பவத்தன்று இரவில் ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகும் செல்வி செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த புலவேந்திரன், மகள் செல்வியை கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த செல்வி நேற்று முன்தினம் காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், புளியங்குடி போலீசார் விரைந்து சென்று, செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்