புன்னை வனநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற புன்னை வனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நொய்யல்,
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற புன்னை வனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்கு வைக்கப்பட்டு, அதில் தீர்த்தங்கள் ஊற்றி புஷ்பங்கள் வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அக்னி குண்டம் வைத்து புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் புன்னம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.