கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் கடவூர், இடையப்பட்டி, அய்யம்பாளையம், சேவாபூர் உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களிடம் கோரிக்கைகள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தரகம்பட்டி,
கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் கடவூர், இடையப்பட்டி, அய்யம்பாளையம், சேவாபூர் உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களிடம் கோரிக்கைகள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், மேற்கண்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கைலாசம், கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.