சின்ன விஷயத்திற்காக இன்னும் எவ்வளவு காலம் அழுது கொண்டு இருப்பாய்? - ஹிருத்திக் ரோஷனுக்கு நடிகை கங்கனா கேள்வி

சின்ன விஷயத்திற்காக இன்னும் எவ்வளவு காலம் அழுது கொண்டு இருப்பாய்? என ஹிருத்திக் ரோஷனுக்கு நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2020-12-16 00:10 GMT
மும்பை,

நடிகர் கங்கனா ரணாவத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது புத்திகெட்ட முன்னாள் காதலன் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 2016-ம் ஆண்டு தனது பெயரில் போலி இ-மெயில் ஐ.டி.யை உருவாக்கி மர்ம நபர் கங்கனா ரணாவத் மற்றும் ரசிகர்களிடம் பேசி மோசடியில் ஈடுபட்டதாக ஹிருத்திக் ரோஷன் மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகார் குறித்து சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கில் இந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வக்கீல் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புகார் தொடர்பான வழக்கு சைபர் போலீசாரிடம் இருந்து குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத், “அவரது அழுகை கதை மீண்டும் தொடங்கிவிட்டது. எங்கள் பிரிவு மற்றும் அவர் விவாகரத்து ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அதில் இருந்து வெளியே வரமறுக்கிறார். மற்ற பெண்ணுடன் நேரத்தை கழிக்க மறுக்கிறார்.

தைரியத்தை வரவழைத்து எனது சொந்த வாழ்கையில் நம்பிக்கையுடன் இருக்கும் போது, அவர் மீண்டும் அதே நாடகத்தை தொடங்கி உள்ளார். ஹிருத்திக் ரோசன் இந்த சின்ன விஷயத்திற்காக இன்னும் எவ்வளவு காலம் அழுது கொண்டு இருப்பாய்?” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்