அ.ம.மு.க. சார்பில் சங்கராபுரம், திருநாவலூரில் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் விழா

அ.ம.மு.க. சார்பில் சங்கராபுரம் மற்றும் திருநாவலூரில் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Update: 2020-12-14 01:12 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் விழா சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் வக்கீல் ஜி.கே.ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் உமாநஜிர், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் உமர்பாஷா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், நகர வர்த்தக அணி செயலாளர் முத்து, நகர பொறியாளர் பிரிவு செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். இதில் நிர்வாகிகள் ஏழுமலை, சக்திவேல், முருகன், செல்வஅரவிந்த், ஹிரா, காசிலிங்கம், சக்திவேல், சசிகுமார், சுப்பிரமணி, முரளி, பாண்டியன், மஸ்தான், தங்கவேல், செந்தில்ராஜ், கண்மணிசெல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது இத்ரிஸ் நன்றி கூறினார். விழாவில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருநாவலூர்

இதேபோல் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா திருநாவலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.பி. ராஜாமணி தலைமையில் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் ஆயிரம் பேருக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.

இதில் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மாவட்ட அவைத்தலைவர் முத்துரங்கன், மாவட்ட பேரவை செயலாளர் முருகானந்தம், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் ராஜிகண்ணு, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஜான்பீட்டர், பாசறை செயலாளர் அஞ்சலாட்சி நாகராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்