இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

Update: 2020-12-12 23:52 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை பெரம்பலூர் போலீசார் பாலக்கரை ரவுண்டானா அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பொங்கல் பண்டிகைக்கு விளையாட்டு விழா நடத்துவதற்காக மைதானத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 பேர் வந்து இயற்கை உபாதை கழித்தனர். இதனை தட்டி கேட்ட இளைஞர்களை, அவர்கள் சிலருடன் சேர்ந்து தாக்கினர். மேலும் இதனை தட்டி கேட்ட பொதுமக்களையும் அவர்கள் தாக்கினர். மேலும் இந்த இயற்கை உபாதையை நாங்களே அள்ளி, அதனை வீடியோ எடுத்து நீங்கள் தான் செய்ய சொன்னீர்கள் என்று கூறி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உங்களை கைது செய்ய வைப்போம் என்று மிரட்டினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்