விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

Update: 2020-12-11 04:23 GMT
தஞ்சாவூர்,

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொக்காரவி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல், மாநில நில உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த வீரன்வெற்றி வேந்தன், தொகுதி துணை செயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட துணை செயலாளர் ஆதவன், மாநில துணை செயலாளர் தமிழ்நிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, அரவிந்தகுமார், அரங்ககுரு, ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், செல்வராஜ், ஆண்டவன், ஊடக பிரிவு அமைப்பாளர் ரகு, தொண்டரணி அமைப்பாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்