திருக்கோவிலூரில் கோவில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
உலகளந்தபெருமாள் கோவில், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலை பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர்,
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் கோவில்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலை பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து உலகளந்த பெருமாள் கோவிலில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினருடன் கோவில்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலந்து கொண்டு கோவிலின் உறுதி தன்மை மற்றும் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் மின்வாரிய துறை உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.