புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-12-11 00:06 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 18 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 28 ஆயிரத்து 947 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 699 பேருக்கு தொற்று இல்லை. 37 ஆயிரத்து 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வில்லியனூர் வி.வி.நகரை சேர்ந்த 45 வயது ஆணும், லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த 72 வயது முதியவரும் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் தற்போது 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் சிகிச்சை

தற்போது 209 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 165 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 617 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 505 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 45 பேர் ஏனாமையும், 8 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 97.35 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்