இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்,
இந்தியா முழுவதும் ஆயுர்வேத டாக்டர்களை அறுவை சிகிச்சை அளிக்க அனுமதிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் மூலம் ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்கள் விருப்பினால் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்று நிதிஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை கண்டித்தும், இந்த அரசு ஆணையை உடனே ரத்து செய்து, நிதிஆயோக் மருத்துவமுறைகளை ஒருங்கிணைக்க அமைத்துள்ள 4 குழுக்களையும் கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் டாக்டர் எழில்நிலவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் ரமேஷ், கன்மணி, கொளஞ்சிநாதன், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.