நாடு தழுவிய முழு அடைப்பு: கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சியினர் மறியல் போராட்டம்
நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 176 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக கரூர்- கோவை ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜெயராமன், சி.பி.ஐ. சார்பில் சிங்காரவேலன், ஐ.என்.டீ.யூ.சி சார்பில் கணேசன், சுய ஆட்சி இந்திய அமைப்பின் சார்பில் கிறிஸ்டினா, சாமானியமக்கள் நல கட்சி சார்பில் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உட்பட 100 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஒரு திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மின்பகிர்மான ஊழியர்களின் கூட்டு குழு
கரூர்- கோவைரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின்பகிர்மான ஊழியர்களின் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டு குழுத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யூ, எல்.பி.எப், ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி, உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை
குளித்தலையில் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று குளித்தலை காந்தி சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் குளித்தலையில் உள்ள அண்ணா சமுதாய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தோகைமலை-மாயனூர்
தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பொது தொழிலாளர் சங்கம், விவசாய சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு, வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சங்கப்பிள்ளை தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இலக்குவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாநில பொது தொழிலாளர் பாதுகாப்பு நல சங்கம் உருசுலநாதன், தமிழ்நாடு பொது சாலையில் தொழிலாளர் பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் செல்வராஜ், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்பு போராட்ட குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தோகைமலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் முற்றுகையிட முயன்ற 38 பேரை கைது செய்தனர்.
மாயனூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை மாயனூர் போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 4 இடங்களில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் காகித ஆலை முன்பு டி.என்.பிஎல் தொழிற்சங்கம், டி.என்.பிஎல். தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். தொழிற்சங்க மாநில செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.