திருவாரூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையில் மூழ்கிய பயிர்களையும், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும், பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து முத்துப்பேட்டையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மன்னார்குடி ஒன்றியம் ஏத்தக்குடி, பொன்னமங்கலம் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்த 300 ஏக்கர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அரசு நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடர்பாடுகள் ஏற்படுகின்ற காலகட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தமிழக மக்களை பாதுகாத்து வருகிறார். அதன் அடிப்படையில் கஜா புயலினால் 12 மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்கள் வழங்கினார். தற்போது நிவர் மற்றும் புரெவி புயலினால் பெய்த தொடர் மழையால் மக்கள் பாதிப்படையாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ முகாம்கள்
அதன்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாத்திடும் வகையில் மாவட்டம் முழுவதும் 211 முகாம்களில் 42,764 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்படாதவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வசதியாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கபசுர குடிநீர், முககவசம், கிருமிநாசினிகள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் புகாமல் தடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பின்படி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட 54,627 எக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 1,606 வீடுகள் மழையினால் சேதமடைந்துள்ளன. 132 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சாந்தா, கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், தாசில்தார் ஜெகதீஸ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன், முகந்தனூர், எண்கண், காப்பனாமங்கலம், அரசவணங்காடு உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அப்போது 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் நடந்து சென்று நீரில் மூழ்கிய வயல்களையும், பயிர்களையும் அமைச்சர் பார்வையிட்டு, பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு பால், ரொட்டி, பாய் மற்றும் போர்வை ஆகியவைகளை வழங்கினார்.
ஆய்வின்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாஸ்கர், நகர செயலாளர் மூர்த்தி, பேரவை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.