நினைவு நாள் கடைபிடிப்பு: அம்பேத்கர் உருவப்படத்துக்கு கட்சியினர் மரியாதை
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு,
அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அறச்சலூரில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கி, அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அருந்ததியர் இளைஞர் பேரவை பொதுச்செயலாளர்கள் எம்.கே.ஆறுமுகம், வி.எஸ்.சண்முகம், மாவீரன் பொல்லான் பேரவை நிர்வாகிகள் என்.கே.துரைசாமி, மாணிக்கம், வீரமணி, கண்ணையன் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பா.ஜ.க.
பா.ஜனதா கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் ஈரோடு காந்திஜிரோட்டில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் அய்யாசாமி, நிர்வாகிகள் ஜெகன், ருத்ரசாமி, சந்திரசேகர், ஜெயா, பாப்பாத்தி, காந்திமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் ஈரோட்டில் அனுசரிக்கப்பட்டது.