ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.
விழாவையொட்டி பெரிய மாரியம்மனுக்கும், சின்ன மாரியம்மனுக்கும் தினமும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. 26-ந் தேதி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன. அதன்பின்னர் தினமும் பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
குண்டம் இறங்கினர்
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி நேற்று முன்தினம் சின்ன மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகள் (விறகு) அடுக்கி வைக்கப்பட்டது. அதன்பின்னர் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் குண்டம் தயாரானது.
கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்து தீ மிதித்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரிகள் தீ மிதித்தனர். ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக குண்டம் இறங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேசமயம் குண்டத்தை சுற்றிலும் பக்தர்கள் நின்று பூசாரிகள் தீ மிதித்ததை பார்த்தனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன மாரியம்மனையும், பெரிய மாரியம்மனையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொங்கல் விழா
தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அலங்கரித்து நிறுத்தப்பட்டு இருந்த தேரில் அம்மனின் உற்சவ சிலை வைக்கப்பட்டது. தேரை வடம் பிடித்து இழுக்கவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜைகள் மட்டும் செய்யப்பட்டன. தேரின் அருகில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 10-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
திருவிழா கடைகள்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழாக்கள் அரசின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சாலையோர திருவிழாக்கடைகளும், குழந்தைகள் விளையாடும் ராட்டினமும் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் திருவிழாக்களை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள கடை வியாபாரிகள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடைகள் அமைக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.