நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி வேடசந்தூர் உள்பட பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2020-12-07 04:39 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையிலும், தமிழ்புலிகள் கட்சி மண்டல செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையிலும், திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில அமைப்புச்செயலாளர் யாழ்புலேந்திரன் தலைமையிலும், தலித் பாசறை இளைஞர் பேரவை நிறுவனர் ஸ்டாலின்தேவி தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாணவர்கள் முற்போக்கு கழகத்தின் ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நத்தத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், பா.ஜனதா சார்பில் மாவட்ட பட்டியலின பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் தவச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்