சேலத்தில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு: தொழிலாளர் விரோத நடவடிக்கையில் பா.ஜனதா அரசு ஈடுபடாது; மத்திய இணை மந்திரி பேட்டி

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நேற்று சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய உருக்குத்துறை இணை மந்திரி பக்கன் சிங் குலாஸ்தே மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2020-12-07 03:04 GMT
அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய உருக்குத்துறை இணை மந்திரி பக்கன் சிங் குலாஸ்தே மாலை அணிவித்து அஞ்சலி
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கரின் நினைவு நாளில் சேலத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததை பாக்கியமாக கருதுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் புரிந்த சேவை நினைவு கூறப்பட வேண்டும். சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவது தொடர்பாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அங்கு பணியாற்ற கூடிய ஒவ்வொரு தொழிலாளர்களின் நலனில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதை நான் உறுதியாக சொல்கிறேன். தொழிலாளர் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது. சேலம் மட்டுமல்ல நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனையும் பாதுகாப்பதில் மத்திய பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மத்திய உருக்குத்துறை இணை மந்திரி பக்கன் சிங் குலாஸ்தே கூறினார்.

மேலும் செய்திகள்