மயிலாடுதுறையில் பலத்த மழையால் சாலையில் 15 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் போக்குவரத்து நிறுத்தம்
மயிலாடுதுறையில் பெய்த பலத்த மழையினால் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டி உடைந்து சாலையில் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவானது. இதனால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் பிரதான குழாய் வழியாக மன்னம்பந்தல் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக 8 இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை பம்பிங் செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் குழாயில் கடந்த 2 ஆண்டுகளாக இதுவரை 15 இடங்களில் குழாய் உடைந்து, மண் சரிவு ஏற்பட்டு சாலை உள்வாங்கியது. இதனால் இந்த உடைப்புகள் சீரமைக்கப்பட்டன.
பெரிய பள்ளம்
இந்தநிலையில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 5 நாட்களாக பெய்த பலத்த மழையினால், கொத்தத்தெரு மெயின்ரோட்டில் நேற்று திடீரென்று பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டி உடைந்து சாலையில் சுமார் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவானது. சாலையில் ஏற்பட்ட இந்த பெரிய பள்ளத்தால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல தரங்கம்பாடி சாலை கீழநாஞ்சில்நாட்டில் கழிவு நீரேற்று நிலையத்துக்கு செல்லும் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தரங்கம்பாடி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, தருமபுரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.