தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

Update: 2020-12-07 00:26 GMT
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது எடுத்த படம்
வள்ளியூர்
மறைந்த சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வள்ளியூரில் உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் நாங்குனேரி தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன், வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு, நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆச்சியூர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு
களக்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜனதா சார்பில் மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சேர்மன் துரை, ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில், தொகுதி செயலாளர் ஈழவளவன், வெனிஸ்டர், சுந்தர், ராஜா, சுபாஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர். அ.ம.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில், மாவட்ட துணை தலைவர் சுபாஷ், நகர செயலாளர் பீர்முகம்மது, இளங்கோ உள்ளிட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேரன்மாதேவி
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருளாளர் சிவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், அழகேசன், ஆதித்தமிழர் பேரவை காலேப், புரட்சிகர இளைஞர் முன்னணி பெரியார் பித்தன், பகுத்தறிவாளர் கழகம் கருணாநிதி மற்றும் பலர் கலந்து 
கொண்டனர்.

பாவூர்சத்திரம்
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டியன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சரவணன், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெயராமன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் கவுரிசங்கர் ரோட்டில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமையில் மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், நகர செயலாளர் ஆறுமுகச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் பீர்மைதீன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில், தாலுகா செயலாளர் அசோக் ராஜ், பால்சாமி உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் வக்கீல் பரமசிவம், ஜெயக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

ஆதித்தமிழர் பேரவை கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ் முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் இசக்கிராஜா, நிர்வாகிகள் ராகவன், செல்வம், பழனி, பெருமாள், முத்தையா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர்
கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஜான் தாமஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் துரைஅரசு, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆசிக், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் தில்லை நடராஜன், மணிபாரதி, கனகராஜ், பாலசுப்பிரமணியன், தமிழ்செல்வன், முருகராஜ், பேச்சி வளவன், மதன், கார்த்திக், தென்காசி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்