விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை வெள்ளநீர் வடியாததால் மக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் 4-வது நாளாக தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ள நீர் வடியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்திருக்கிறது. வங்க கடலில் உருவான புரெவி புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. புயல் வலுவிழந்த நிலையிலும், மழை ஓய்ந்தபாடில்லை. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது.
இதை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து பெய்யத்தொடங்கிய மழை, மாலை வரை விட்டு, விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்ய ஆரம்பித்தது.
இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மயிலம் உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில், வானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் பெரும்பாலான பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் காகுப்பம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதுபோல் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை ஸ்டாலின் நகரில் உள்ள 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பம்பை ஆறு, சங்கராபரணி ஆறு, வராக நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்று அணைக்கட்டு பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் இந்த மழையின் காரணமாக ஏரி, குளங்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செஞ்சி
செஞ்சி பகுதியில் மழை பாதிப்புகளையும், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஐ.ஜி. சாரங்கன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதில், ரெட்டிபாளையத்தில் இருந்து தென்பாலை செல்லும் வழியில் வராக நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை பார்வையிட்டனர் கூடுதலாக தண்ணீர் வந்தால் போக்குவரத்தை தடை செய்யவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் பாதுகாக்கவும் பாதுகாப்பு பணிகள் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
விழுப்புரம் - 74
வளவனூர் - 44
கோலியனூர் - 42.60
அனந்தபுரம் - 41
கெடார் - 39
வானூர் - 37
மரக்காணம் - 33.50
கஞ்சனூர் - 29
முண்டியம்பாக்கம் - 28
சூரப்பட்டு - 27
நேமூர் - 26
திருவெண்ணெய்நல்லூர்......- 21
அரசூர் - 20
வல்லம் - 19
முகையூர் - 18
மணம்பூண்டி - 16
செம்மேடு - 15
செஞ்சி - 14
அவலூர்பேட்டை - 14
வளத்தி - 13
திண்டிவனம் - 11