நெல்லையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு; ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
நெல்லை மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதா உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், முன்னாள் மானூர் யூனியன் தலைவர்
கல்லூர் வேலாயுதம், எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுத்தமல்லி
சுத்தமல்லியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்னாள் மானூர் யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலப்பாளையத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலிதா உருவப்படத்திற்கு முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட 55 வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேரன்மாதேவி-திசையன்விளை
சேரன்மாதேவியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான இசக்கி சுப்பையா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, சேரை மாரிச்செல்வம், உச்சிமாகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலசெவலில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, நகர செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு வக்கீல் பழனி சங்கர், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் டிம்பர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திசையன்விளை காமராஜர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர்.
நாங்குநேரி
ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. நேற்று பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி, தருவை, முன்னீர்பள்ளம், நாங்குநேரி, மன்னார்புரம், சிறுமளஞ்சி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், மருதூர் ராமசுப்பிரமணியன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள், நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தர்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாங்குநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் குபேந்திராமணி, ஒன்றிய பாசறை செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கூடல்
முக்கூடலில் அ.தி.மு.க. நகர செயலாளர் மரிய ஜேசையா வீட்டின் முன்பு, பஸ் நிலையம், ராமசாமி கோவில் முன்பு, அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், அகல்விளக்கு ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். முக்கூடல் நகர செயலாளர் மரிய ஜேசையா, செல்வன், நகர இளைஞர் அணி செயலாளர் வில்சன், எம்.ஜி.ஆர். மன்றம் சண்முகநாதன், சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாப்பாக்குடியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்தும், அகல்விளக்கு ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட மாணவரணி செயலாளர் தளபதி பிரேம்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் முத்து சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, ரஸ்தா தங்கவேல், அமர்நாத், செந்தில், கபாலிபாறை ஊராட்சி தலைவர் வைகுண்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கன்குளம்
வடக்கன்குளம் அருகே ஆவரைகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு நெல்லை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வடக்கன்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்தனர். வள்ளியூர் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுகுமார், இளைஞர் பாசறை செயலாளர் ஆசீர் மதன், கிளை செயலாளர் தாமஸ், டென்சிங், நிர்வாகிகள் பெனடிக், செல்வசேகர், செல்வகுமார், ஜெயன், ஞானபிரகாசம், துரை, ராதாகிருஷ்ணன், மரியசிங்கபுரம் கிளை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.