17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மோகனூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-12-04 11:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆரியூர் ஆமைப்பாறை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அருள்பாண்டியன் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அருள்பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருள்பாண்டியனின் பெற்றோர் உள்பட 8 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட அருள்பாண்டியனை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்