ஈரோடு மாவட்டத்தில் நிற்காமல் பெய்த சாரல் மழை
ஈரோடு மாவட்டத்தில் நிற்காமல் சாரல் மழை பெய்தது.
ஈரோடு,
நிவர் புயலை தொடர்ந்து வங்க கடலில் புரெவி புயல் உருவானது. இந்த புயல் நேற்று ராமேஸ்வரம்-பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை காலையில் இருந்து சூரியனை காணமுடியவில்லை. மேலும் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. அவ்வப்போது சற்று பலத்த மழையும் பெய்தது. ஈரோட்டில் மழை தூறலாக தொடங்கியது. காலை 9 மணிவரை சிறு தூறலாகவும், அவ்வப்போது சாரலாகவும் மழை பெய்தது.
பின்னர் சற்று நேரம் மழை நின்றது. தொடர்ந்து மாலைவரை அவ்வப்போது மழைச்சாரலாகவும், தூறலாகவும் பெய்து கொண்டே இருந்தது. மழை வலுத்து பெய்யவில்லை. இதனால் வீதிகளில் வெள்ளம் ஓடும் அளவுக்கு தண்ணீர் சேரவில்லை.
சேறும்-சகதியும்
அதே நேரம் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டு செப்பனிடப்படாத சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. இது சாலைகளில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மழை காரணமாக நேற்று முழுவதும் வானம் கருமேக கூட்டமாக இருந்தது. இருள் சூழ்ந்து பருவநிலை மாறி இருந்தது. இரவு நேரத்தில் கடுங்குளிர் காற்று வீசியது.
குடை பிடித்தபடி...
இதேபோல் கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, சத்தி, தாளவாடி, அந்தியூர், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, மொடக்குறிச்சி என அனைத்து பகுதிகளிலும் காலை முதல் மாலை வரை நிற்காமல் சாரல் மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. ஒரு சிலர் குடை பிடித்தபடி சென்றனர். வேலைக்கு செல்பவர் குடை பிடித்தபடியும், மழை உடை (ரெயின் கோட்) அணிந்தபடியும் சென்றதை காணமுடிந்தது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று குளிர்ந்த தட்பவெட்ப நிலையே நிலவியது.
மழை அளவு
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டர் அளவில் வருமாறு:-
கொடுமுடி-6.6
சென்னிமலை-2
மொடக்குறிச்சி-2
கவுந்தப்பாடி-1
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.