புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2020-12-03 23:02 GMT
பாளையங்கோட்டையில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்
பட்டாசு வெடித்தனர்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்கப்போவதாக அதிரடியாக நேற்று அறிவித்தார். இதை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நெல்லை மாநகர் பகுதியில் டவுன் ரதவீதிகள், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, நெல்லை கோர்ட்டு முன்பு, பாளையங்கோட்டை தெற்கு பஜார், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற இணைச்செயலாளர் பகவதி ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தாயப்பன், மாநகர இணைச் செயலாளர் குணசேகர பாண்டியன், கட்சி நிர்வாகிகள் மாரியப்பன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி
நாங்குநேரி ஒன்றியம் பரப்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தின் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரஜினிவிஜய் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திசையன்விளை காமராஜர் சிலை முன்பு ரஜினி மக்கள் மன்ற நெல்லை மாவட்ட துணைத் தலைவர் குமரகுரு தலைமையில் மன்றத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

தென்காசி
தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர் திருமலை குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிசய குமார், குற்றாலம் செயலாளர் நாராயணன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் நல்லையா பாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் முருகையா பாண்டியன், தென்காசி நகர செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் மணிக் கூண்டு அருகே ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் இணை செயலாளர் சக்திகுமார், துணை செயலாளர் அபுபக்கர், மக்தும், கடையநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் மாரித்துரை, ரஜினி முனீஸ், மாரிஸ், நிர்வாகிகள் மாரியப்பன், பாஸ்கர், பக்கீர் அஹமத், மயில்ராஜ், மணி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்