குழித்துறையில் ரூ.31 கோடியில் குடிநீர் விரிவாக்க திட்டம் தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
குழித்துறை நகராட்சியில் ரூ.31 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டினார்.
குழித்துறை,
குழித்துறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தற்போது வினியோகம் செய்யப்படும் குடிநீர் மக்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே, மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழித்துறை நகராட்சிக்கு ரூ.31 கோடியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கப்படும் என கடந்த மாதம் 10-ந்தேதி நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
அதன்படி புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட ஞாறான்விளை குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர், புதிய குடிநீர் விரிவாக்க திட்டம் குறித்து தளவாய் சுந்தரம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிட பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குழித்துறை நகராட்சி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்தில் நாளொன்றுக்கு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.30.94 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
24 ஆயிரம் பேர்...
தற்போது குழித்துறை நகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றில் 3 கிணறுகளை நீர் ஆதாரமாக கொண்டு சுமார் 2.30 மில்லியன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் மூலம் நபர் ஒன்றுக்கு தினமும் 80 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய குடிநீர் திட்டத்திற்காக 4.83 மில்லியன் லிட்டர் அளவு நீரை குழித்துறை ஆற்றில் ஞாறான்விளையில் உள்ள கிணறுகளில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்த பின் புதிதாக அமைக்கப்படவுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் தற்போது பயனில் உள்ள 8 மற்றும் புதிதாக அமைக்கப்படும் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும். பின்னர், குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது தினமும் நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் 24 ஆயிரத்து 10 பேர் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு ரப்பர் வளர்ப்பு கூட்டுறவு தலைவர் ஜான்தங்கம், மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதர்சன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மைக்கேல் சேவியர், குழித்துறை நகராட்சி ஆணையர் மூர்த்தி, உதவி குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் ராஜன், சதீஷ்குமார், குழித்துறை நகராட்சி பொறியாளர் பேரின்பம், அரசு வக்கீல் அருள்பிரகாஷ் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.