கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
கீழ்பவானி வாய்க்காலில் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் தளம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கீழ்பவானி வாய்க்காலில் விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கீரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
தண்ணீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள தண்ணீரை காலநீட்டிப்பு செய்து டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை திறந்து விட வேண்டும். 2-ம் போக தண்ணீர் திறப்பு தேதியை வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க வேண்டும்.
பவானிசாகர் அணை வளாகத்தில் எம்.ஏ.ஈஸ்வரனுக்கு நினைவு தூண் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி பேசும்போது கூறியதாவது:-
பவானிசாகர் அணையும், கீழ்பவானி வாய்க்காலும் மண்ணால் அமைக்கப்பட்டு உள்ளன. கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் 2 போகங்களாக பிரித்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதாவது அதிகபட்சமாக வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கசிவுநீர் மூலமாக விவசாய பணிகள் நடந்து வருகிறது.
கான்கிரீட் தளம்
இந்தநிலையில் பொதுப்பணித்துறை சார்பில் கீழ்பவானி வாய்க்காலில் விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஏலம் கோரப்பட்டு உள்ளது. இந்த பெயரில் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். மேலும், மரங்கள் வெட்டி அகற்றப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.