ஏம்பலத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கிளை திறப்பு: வெளிப்புற சிகிச்சையில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்

இந்தியாவிலேயே வெளிப்புற சிகிச்சையில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-02 23:32 GMT
வில்லியனூர், 

புதுவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனையின் புதிய கிளை ஏம்பலம் கிராமத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மருத்துவமனையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், தொழிலாளர் துறை செயலர் வல்லவன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக புதுவைக்கு வருபவர்களில் 97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக சதவீதம் புற்று நோயை குணமாக்கிய மாநிலமாக புதுவை விளங்கி வருகிறது. இதற்கு மருத்துவ துறைக்கும், ஒத்துழைப்பு அளித்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே வெளிப்புற சிகிச்சையில் சிறந்த மாநிலமாக புதுவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் சட்ட உலகில் சிறந்த மாநிலமாக புதுவைக்கு விருதும் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் என்னுடைய தலைமையிலான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் நலத்துறை இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்