காவிரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்த அனுமதி: அமைச்சர் தங்கமணிக்கு விவசாயிகள் சங்கத்தினர் நன்றி

கந்தம்பாளையம் அருகே கோலாரம், மணியனூர், செருக்கலை, நல்லூர், ராமதேவம் ஆகிய 5 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2020-12-01 21:33 GMT
அதன்படி கோலாரம் ஊராட்சியில் பி.எஸ்.டி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் தென்னரசு தலைமையில் மொளசி காவிரி ஆற்றங்கரையோரத்தில் கிணறு அமைத்து 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்கள் அமைத்து குடிநீருக்கும், சொட்டு நீர் பாசனத்திற்கும் பயன்படுத்துவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்