கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை,
தென்கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் இதுவாகும். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
மிகவும் பழமையான இந்த மலைக்கோட்டை 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாக உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமான சுவாமி, மட்டுவார்குழலம்மை, மலையின் கீழ் பகுதியில் மாணிக்கவிநாயகர் சன்னதியும் உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை 5.45 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து நேற்று மாலை ஏற்றப்பட்ட பரணி தீபத்திலிருந்து தீபம் ஏற்றப்பட்டு தீப ஜோதியுடன், மேளதாளங்கள் முழங்க உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான இரும்பு கோபுரத்தில், 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியால் திரி தயாரிக்கப்பட்டு, 900 மீட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் செப்புக் கொப்பரையில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பக்தர்களுக்குஅனுமதி மறுப்பு
இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து இன்று மாலை முதல் மூன்று நாட்களுக்கு அணையாமல் எரிய கூடியதாகவும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அரசு உத்தரவை மதித்து பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டி இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடைபெறவுள்ள கார்த்திகை தீப நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டாம் என்பதற்காக அவர்களின் நலனை காக்க, இன்று மாலை 3 மணிக்கு மேல் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலையில் எப்போதும் போல பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம்.
3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்குபிறகு மலைக்கோட்டை மேலிருந்து அனைத்து பக்தர்களும் கீழே இறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.