மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்கும் திட்டம் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

Update: 2020-11-27 22:40 GMT
புதுச்சேரி, 

புதுவையில் உள்ள மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக வழங்குவது போல் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

காய்கறி கழிவுகளை கிராமப்புறங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கு மானியம் வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேருவது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் பேரிடர் காலத்தில் மீட்பு படை வீரர்கள் பயன்பெறும் வகையில் சூ, இருள் சூழ்ந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட விளக்குள் பொருத்திய ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகிறது. இதனை பேரிடர் மேலாண்மை மற்றும் சாலை பாதுகாப்பில் இருந்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தலைமை செயலாளர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினேன். அவரும் அதனை வாங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்