பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்பு.

Update: 2020-11-26 12:37 GMT
வீரபாண்டி, 

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி மற்றும் இடுவாய், மங்கலம், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் குப்பாண்டம் பாளையம் பகுதியில் நடை பெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதா வது:-

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் பல கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வீரபாண்டி, பல்லடம், பொங்கலூர் ஆகிய பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்வது குறித்தும், அதனை உடனடியாக சரி பார்க்க வேண்டும். பல்லடம் சட்டமன்ற தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதனை வரும் தேர்தலிலும் நிலைநாட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை கொ டுத்து வருகிறார்கள். அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி பல்லடத்தில் பிரம்மாண்ட மான விழாவை வைத்து அன்று திருப்பூர் மாவட்டத் துக்கு உட்பட்ட உடுமலை, பல்லடம் பகுதிக்குட் பட்ட நிர்வாகிகளை வரவழைத்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னாள எம்.எல்.ஏ.பரம சிவம், வீரபாண்டி பகுதி செயலாளர் பண்ணையார் பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், விவசாய பிரிவுச் செயலாளர் பாபு மற்றும் பகுதி உறுப்பினர்களான லோகநாதன், சி.பி.வசந்தா மணி, ராஜேந்திரன் நாகஜோதி, கவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்