சென்னையில் மூடப்பட்ட மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்திய பொதுமக்கள்

சென்னையில் பொதுமக்கள் மழை வெள்ள நீரில் வாகனங்களை நிறுத்த முடியாமல் மூடப்பட்ட மேம்பாலங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

Update: 2020-11-26 06:30 GMT
சென்னையில் புயல்-மழை காரணமாக நேற்று 14 முக்கிய மேம்பாலங்கள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து மேம்பாலங்களில் அனுமதிக்கப்படாததால், அவை வெறிச்சோடி கிடந்தன. தெருக்களில் தேங்கிய மழை வெள்ள நீரில் வாகனங்களை நிறுத்த முடியாமல் பொதுமக்கள் பல பகுதிகளில் தவித்தபடி இருந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை காலியாக கிடந்த மேம்பாலங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்த காட்சியை பல இடங்களில் காண முடிந்தது.

மேலும் செய்திகள்