தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன.
தென்காசி,
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 62 இடங்களில் பொதுக்கூட்டத்தை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாளையங்கோட்டையில் நடந்த ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது.
நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டத்தை பார்ப்பதற்கு 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லட்சுமணன், தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், விவசாய அணி செயலாளர் சாமிதுரை, பரணி பொன்ராஜ், எழில்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. முன்னோடிகள் 254 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் பொற்கிழி வழங்கினார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு பேசினார். இந்த கூட்டம் தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கடையம், ஆழ்வார்குறிச்சி உட்பட 60 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புளியங்குடி மூர்த்தி பாப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் 40 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. முன்னோடிகள் 150 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாநில வர்த்தக அணித்தலைவர் அய்யாதுரை பாண்டியன், மாநில சிறுபான்மை அணி துணை தலைவர் ரசாக், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் அப்துல் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா நன்றி கூறினார்.
செங்கோட்டையில் நடந்த கூட்டத்தில் கலைஞர் தமிழ்சங்க செயலாளா் மு.ஆபத்துகாத்தான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் புளியரையிலும் கூட்டம் நடந்தது.