அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அ.தி.மு.க. முகவர்கள் ஆலோசனைகூட்டம் நடந்தது.

Update: 2020-11-21 01:48 GMT
செங்கல்பட்டு, 

காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்ற கஜேந்திரன், நகர செயலாளர்கள் ரவிக்குமார், செந்தில்குமார் செங்கல்பட்டு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாநில இலக்கிய அணி செயலாளர் ப.வளர்மதி, முன்னாள் எம்.பி.கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள். முடிவில் வக்கீல் விநாயகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்