3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த காற்றாலை ஊழியர் சாவு - ஆரல்வாய்மொழியில் பரிதாபம்

ஆரல்வாய்மொழியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த காற்றாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-11-14 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 45), தனியார் காற்றாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  இரவு சுகுமாரன் தனது வீட்டில் 3-வது மாடியில் தூங்க சென்றார்.

இந்த நிலையில் 1.30 மணி அளவில் திடீரென சுகுமாரன் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், குடும்பத்தினரும் ஓடி வந்தனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தூக்க கலக்கத்தில் சுகுமாரன் மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து காற்றாலை ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்