திண்டிவனத்தில், ரூ.268 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
திண்டிவனத்தில் ரூ.268 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணியை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் முதல் நிலை நகராட்சியாக உள்ளது. 33 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகரில் 84 ஆயிரத்து 87 பேர் பயன்பெறும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற் காக அரசு ரூ.268 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டப் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண் முகம் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து திட்டப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச் சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க. செயலாளர் முகமது ஷெரீப், திண்டிவனம் நகர செயலாளர் வக்கீல் தீனதயா ளன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்க டேசன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் தயாளன், தளபதி ரவி, மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆணையர் வசந்தி, அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதாள சாக்கடை திட்டப் பணியை செய்வத ற்காக 9 பகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. இதில் 6 துணை கழிவுநீர் உந்து நிலையங்கள், 3 கழிவுநீர் தூக்கி நிலையங்கள், 4 கழிவுநீர் தூக்கி ஆள்நுழைக் குழிகள் அமைக் கப்பட உள்ளது. 15.26 கிலோ மீட்டர் நீளத்திற்கு 150 மில்லி மீட்டர் முதல் 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பி.வி.சி. மற்றும் இரும்பு குழாய்கள் மூலம் துணை கழிவுநீர் உந்துநிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கு கொண்டு செல்லப்படு கிறது. இக்கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையம் இடைநிலை மக்கள் தொகை கணக்கில் கொண்டு 11.44 எம்.எல்.டி. கழிவுநீரை சுத்தி கரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் வீடுகளுக் கும், 3 ஆயிரம் வணிக வளாகங்களுக்கும் இணைப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.