சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்
சுகாதாரமான குடிநீர் வழங்க அரசை வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
முத்தியால்பேட்டை தொகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாகவும், சுகாதாரமான குடிநீர் வழங்க அரசை வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, நகர மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், மணிமாறன், துணைத்தலைவர் விஜயரங்கம், தொகுதி பொதுச்செயலாளர்கள் அன்பரசன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.