நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் 10 பேர், அம்பை பகுதியில் 2 பேர், மானூர் பகுதியில் 2 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 5 பேர், பாப்பாக்குடி பகுதியில் 2 பேர், வள்ளியூர் பகுதியில் 2 பேர், களக்காடு பகுதியில் 2 பேர் என மொத்தம் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 25 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 210 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 681 பேர் வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 389-ஆக உள்ளது. இதில் 14 ஆயிரத்து 922 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.