பெரம்பலூரில், மொபட் மீது கார் மோதி விவசாயி பலி - உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றபோது பரிதாபம்

பெரம்பலூரில் மொபட் மீது கார் மோதியதில், உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-11-10 22:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பென்னகோணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுரேஷ்குமார்(வயது 39). விவசாயி. நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு செல்வதற்காக பெரம்பலூர் நோக்கி மொபட்டில் வந்தார். 4 ரோடு அருகே வந்தபோது அணுகுசாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார்.

அப்போது எதிரே வந்த சொகுசு கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார், ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக சுரேஷ்குமாரின் மனைவி கீதா பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கார் டிரைவர், அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சிறுகுளத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அருண்குமாரை(26) போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்