கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-11-10 17:02 GMT
கள்ளக்குறிச்சி, 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் தாஜிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் அரவிந்தன், மகளிர்அணி ஒருங்கிணைப்பாளர் பார்வதி, இணை செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சாமிதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாநில நிதிக்குழு ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு மானியம் விடுவிக்கவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட தணிக்கையாளர் செல்வராஜ் மற்றும் ஆரோக்கியசாமி, ஜெயசுதா, மாப்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, மந்திரி, மாயக் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார பொருளாளர் கண்ணையன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்