இலவச சுகாதார காப்பீடு திட்டம் தொடர்பாக மத்திய குழு ஆய்வு

இலவச காப்பீடு திட்டம் தொடர்பாக மத்திய குழுவினர் புதுவையில் ஆய்வு செய்தனர்.

Update: 2020-11-09 21:12 GMT
புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் இலவச காப்பீடு திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் மீதமுள்ள சுமார் 2½ லட்சம் குடும்பத்தினருக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய திட்டத்தை வருகிற டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

ஆலோசனை

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறையின் ஆயுஷ்மான் பாரத் திட்ட முதன்மை செயல் அதிகாரி விபுல் அகர்வால் தலைமையிலான குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோரை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், முதல்-அமைச்சரின் செயலாளர் விக்ராந்த் ராஜா, கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண், இயக்குனர் மோகன்குமார், ஆயுஷ்மான் பாரத் திட்ட புதுவை அதிகாரி டாக்டர் ஆனந்தலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கவர்னருடன் சந்திப்பு

அதன்பின் இந்த குழுவினர் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள். அப்போது திட்டத்தை புதுவை மாநிலத்தில் செயல்படுத்த தேவையான உதவிகளை செய்ய உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்