தனியார் நிறுவன ஊழியரின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் இளம்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் பணம் கொடுக்காவிட்டால் தனியார் நிறுவன ஊழியரின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2020-11-09 19:58 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது நபர் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, முகநூல் மூலமாக சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனது பெயரை ரியா என்று கூறி இருந்ததுடன், மாடலிங் துறையில் பணியாற்றுவதாக அந்த நபரிடம் கூறி இருந்தார். பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பறிமாறிக் கொண்டனர்.

அதன்பிறகு, அடிக்கடி செல்போனில் இளம்பெண்ணும், அந்த நபரும் பேசி வந்துள்ளனர். கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி அந்த நபரை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலமாக இளம்பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிர்வாணமாக இருக்கும்படி அந்த நபரிடம் இளம்பெண் கூறியதாக தெரிகிறது. அதன்படி, அவரும் நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. இதனை இளம்பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது.

இளம்பெண்ணுக்குவலைவீச்சு

பின்னர் அந்த நபர் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை, அவருக்கு அனுப்பி வைத்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

மேலும் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், பணம் கொடுக்கும்படி கேட்டு அந்த நபரிடம் இளம்பெண் மிரட்டியுள்ளார். ஆனால் பணம் கொடுக்க அந்த நபர் மறுத்து விட்டார். இதனால் நிர்வாண வீடியோவை வெளியிடப் போவதாக கூறி, அடிக்கடி அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு இளம்பெண் மிரட்டியுள்ளார்.

இதுபற்றி மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்