திருவாரூர் மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் சாந்தா பேச்சு
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் சாந்தா கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழையின் போது மாவட்டத்தில் பாதிக்ககூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் மற்றும் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பாக இருக்கிறதா எனவும், போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.முகாமில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முகாம்களில் கொரோனா பரவாமல் அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்து சுகாதார நடவடிக்கைகளை அமைத்திட வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற மின்மோட்டர் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் கை எந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவத்துறையினர் பாம்புகடி உள்பட்ட அனைத்து மருந்துகளையும் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். அனைத்து துறையினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.