தேவகோட்டையில் ரூசோ நினைவு தின பேரணி - தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு
தேவகோட்டையில் ரூசோ நினைவு தின பேரணி நடந்தது. இதில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்த வே.ரூசோவின் 22-ம் ஆண்டு நினைவு தின பேரணி நேற்று தேவகோட்டையில் நடைபெற்றது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ரூசோவின் கல்லறைக்கு பேரணியாக வந்தனர். பேரணிக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். தி.மு.க.வினர் ரூசோவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ரூசோ சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப.துரைராஜ், மாசாமா.ராமச்சந்திரன், மதியரசன், மாநில தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் வக்கீல் காசிநாதன், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் வெங்கடாசலம், சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் பவானி கணேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமிக்கண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர் விசாலயன்கோட்டை அசோகன், மாவட்ட துணைச்செயலாளர் மணிமுத்து, தேவகோட்டை நகர செயலாளர் பெரிபாலா, தேவகோட்டை ஒன்றிய செயலாளர்கள் வடக்கு பூபாலசிங்கம், தெற்கு நாகனி ரவி, காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் தேவகோட்டை நகர செயலாளர் மதார்சேட், மாவட்ட பிரதிநிதி இளங்கோ, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அழகையா, நகர தி.மு.க. பொருளாளர் அன்புச்செல்வன், ராமநாதன், மாவிடுதிக்கோட்டை ஜான் பிரிட்டோ, ரெஜிஸ், ஓரிக்கோட்டை ராஜா, ஆண்டா ஊரணி வளனரசு, தேவகோட்டை ராஜரத்தினம், காளையார்கோவில் ஜேசுராஜா, ராமேசுவரம் முத்துராஜன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி செயல் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையிலும் மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன் முன்னிலையிலும் ரூசோ சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் கல்லறைக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் குழந்தைசாமி மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பார்க்கவ குல சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமையிலும், மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜான் மற்றும் வட்ட தலைவர் பாரி ஆகியோர் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரன் ரூசோ பேரவை சார்பில் நிர்வாகிகள் அலங்காரம், ஆரோக்கியசாமி, தமிழரிமா, வக்கீல் கணேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சாந்தாள் அரிமா மற்றும் பாவெல் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ மற்றும் அவரது மகனும் திரைப்பட நடிகருமான ஆண்டனி நிஷாந், ஜெம்மாநிபிலா ராஜா ஸ்டீபன் வரவேற்றனர்.