கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டதை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை அடித்துக் கொன்றோம் கைதான அண்ணன்-தம்பி வாக்குமூலம்
கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டதை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை அடித்துக்கொன்றோம் என்று கைதான அண்ணன், தம்பி போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த இவர், வீராணம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் தர்மேந்திரன் (42), அவருடைய தம்பி விஜி (37). சகோதரர்கள் இருவரும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் அவர்களை பிரிந்து வீட்டை, விட்டு வெளியேறி அதே கோவிலில் இரவு நேரத்தில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் பழனிசாமிக்கும், தர்மேந்திரன், அவருடைய தம்பி ஆகியோருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் அங்கு கிடந்த கட்டையால் பழனிசாமியை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்துபோனார். இதையொட்டி வீராணம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தர்மேந்திரன், அவருடைய தம்பி விஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதான அண்ணன், தம்பி இருவரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
பழனிசாமி சம்பவத்தன்று கோழிக்கறி எடுத்து வந்து அருகிலுள்ள ஒருவரிடம் சமைத்து வாங்கி உள்ளார். பின்னர் அதை மதியம் சாப்பிட்டு விட்டு மீதி இருந்த கறியை கோவில் பகுதியில் வைத்து விட்டு வெளியில் சென்று உள்ளார். அப்போது தர்மேந்திரன், விஜி ஆகிய 2 பேரும் அந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் வெளியில் சென்றுவிட்டு அங்கு வந்தபோது கோழிக்கறி இல்லாதது கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அண்ணன், தம்பி இருவரும் கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நான் சமைத்து வைத்திருந்த கோழிக்கறியை எடுத்து ஏன் சாப்பிட்டீர்கள் என்று தட்டிக்கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கட்டையால் பழனிச்சாமியை தாக்கி உள்ளனர். இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார். இவ்வாறு போலீசார் கூறினர்.