செங்கோட்டை அருகே, வாலிபர் தற்கொலை

செங்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-08 22:30 GMT
செங்கோட்டை, 

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் காளிதுரை (வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் காளிதுரைக்கு குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த காளிதுரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்