416 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை மாவட்டத்தில் 416 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2020-11-08 09:25 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை மூலம் முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் கதா் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் பாஸ்கரன், பிற்படுத்தபட்டோர் நலத்துறை மூலமாக 115 முஸ்லிம் களுக்கும் தொழில் தொடங்க கடன் உதவியை வழங்கினார்.

மானியம்

அதனைத்தொடா்ந்து, மகளிர் திட்ட அலுவலகம் மூலம் 26 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களும், 390 பேருக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கிக்கடன்களும் என மொத்தம் 416 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 12 மகளிர் குழுவிற்கு வேளாண் எந்திரம் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க தலா ரூ.8 லட்சம் வீதம் ரூ.96 லட்சம் மானியத்தையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட இயக்குனா் அருண்மணி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளா் இளங்கோவன், பிற்படுத்தபட்டோர்நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட குழுத்தலைவா் சந்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துணைத்தலைவர் கேசவன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்