அதிகாரிகள் கோப்புகளை கண்காணிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
அதிகாரிகள் கோப்புகளை கண்காணிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
முக்கியமான கோப்புகளின் முடிவுகள் நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையின் கோப்புகளை கண்காணிப்பது அந்தந்த செயலாளர்களின் கடமையாகும். அத்தகைய முக்கியமான கொள்கை மற்றும் ஒப்புக்கொள்ளும் விஷயங்களின் கோப்புகளை வைத்திருக்க வேண்டும். கவர்னர் கோப்புகளை ஆய்வுசெய்யும்போது அந்த நிழல் கோப்புகள் நிர்வாக பணிகளில் தாமதங்களை குறைத்து செய்திகளை புரிந்துகொள்ள உதவுகிறது.
கடந்த காலங்களில் நிழல்கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்டன. சட்ட அதிகாரிகள் இந்த கோப்புகளை கண் காணிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நினைவூட்டல் கோரிக்கை எப்போதுமே அடுத்த மேலதிகாரிக்கு அனுப்பப்படலாம்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இது சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவும். வரவிருக்கும் வாரத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள செயலர்களுடனான நேருக்கு நேர் ஆலோசனையின்போது அமைச்சர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோரிடம் நிலுவையில் உள்ள கோப்புகள் தொடர்பாக விவாதிக்கும்போது இது உதவும்.
திறமையான நிர்வாகத்தில் விரைவான முடிவெடுப்பதும் அடங்கும். கோப்புகளை கண்காணிக்காமல் நிலுவையில் உள்ளவை குறித்து விவாதிக்க மற்றும் தீர்வுகாண வாய்ப்புகளை தேடாமல் முடிவு என்பது சாத்தியமில்லை. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.