‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: திருச்சி சாலையோர கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை - மறு முத்திரையிடப்படாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருச்சி சாலையோர கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி மறு முத்திரை செய்யப்படாத தராசுகள் மற்றும் எடைக்கற்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட், பெரிய கடை வீதி, என்.எஸ்.பி சாலை ஆகிய இடங்களில் சாலையோர கடைகள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை செய்யும் பழம் மற்றும் காய்கறி வகை எடை அளவுகளில் மோசடி நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. ஒரு கிலோவிற்கு பழம் வாங்கினால் அதில் 100 முதல் 200 கிராம் வரை குறைத்து மோசடி செய்வதாக பல்வேறு தரப்பு பொதுமக்களும் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை ‘தினத்தந்தி’ இதழில் இது சம்பந்தமான விரிவான செய்தி படத்துடன் பிரசுரமாகி இருந்தது.
இந்த செய்தியின் எதிரொலியாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன், இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோர் அறிவுரையின்படியும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு தலைமையில் அதிகாரிகள் நேற்று திடீர் அதிரடி சோதனை நடவடிக்கையில் இறங்கினார்கள்.
காந்தி மார்க்கெட் நெல் மண்டி தெரு, பெரியகடைவீதி, என். எஸ். பி. ரோடு, சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சாலையோர பழக்கடைகள் உள்பட மொத்தம் 89 கடைகளில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. திருச்சி சட்டமுறை எடையளவு ஆய்வாளர்கள் வெங்கடேசன், குணசீலன், ராஜேந்திரன், கார்த்திகேயன், லட்சுமி, அகஸ்டின், பழனியம்மாள், பிரபாகரன், பவானி மற்றும் பயிற்சி ஆய்வாளர்கள் தனலட்சுமி, சிவரஞ்சனி கார்த்திகேயன் ஆகியோர் இந்த அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது பழவகைகள் சரியான எடையில் விற்கப்படுகிறதா? வியாபாரிகள் நிறுப்பதற்கு பயன்படுத்தும் எடை கற்கள் அனைத்தும் உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தராசுகள் உரிய எடை காண்பிக்கிறதா? என்பதை அறிய அரசால் வழங்கப்பட்டு உள்ள ஆய்வக சோதனை எடை அளவுகளை கொண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் ஆண்டுக்கு ஒரு முறை மறு முத்திரை செய்யப்படாமல் 33 வியாபாரிகள் பயன்படுத்திவந்த 21 மின்னணு தராசுகள், 12 மேடை தராசுகள் மற்றும் 39 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வந்த நுகர்வோர்களிடம் மின்னணு தராசில் தட்டை வைக்கும்போது தராசு பூஜ்ஜியம் என்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதை நுகர்வோர்கள் கண்டறிந்து அதன் பின்னரே பொருட்கள் வாங்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. எடை அளவில் மோசடி செய்யும் வியாபாரிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.